பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள் - உதயா

காலமெல்லாம் பயணித்த
பகையெல்லாம் காற்றாய்
பறந்து மறந்துப்போக
அன்பை பொங்கலிட்டு
ஆனந்தம் கொள்ளுங்கள்
போகியன்று ..........
நாடெங்கும் மக்கள்
நலமாக உளமார
உலகை சுற்றும்
பரிதியிக்கு
பாசத்தை பொங்கலிட்டு
புத்தின்பம் கொள்ளுங்கள்
பெரும் பொங்கலன்று ...........
யுகங்கள் தோறும்
உழவனுக்காக உழைக்கும்
காளைகளுக்கும்
வாழ்நாள் முழுவதும்
மானிடர்களுக்கு
பால்கொடுத்து உதவும்
பசுக்களுக்கும்
நன்றியை பொங்கலிட்டு
பேரானந்தம் கொள்ளுங்கள்
மாட்டுப் பொங்கலன்று...........
மனிதர்களின்
தேவைகள் பூர்த்தியாக
குருதியை வியர்வையாக
உருக்கி உழைக்கும்
உழவனுக்கு
உள்ளன்பை பொங்கலிட்டு
பேரின்பம் கொள்ளுங்கள்
உழவர்திரு நாள்யன்று............
ஒவ்வொரு பொங்கலன்றும்
உறவுகளைப் பானையாக்கி
ஆனந்தத்தை நீராக ஊற்றி
அன்பையையும் பாசத்தையும்
பொங்கலிட்டு புன்னகையை
படையலாக உண்ணுங்கள் .........
கசப்பான நினைவுகள்
கானல் நீராக்க
கரும்பையும் படையலோடு
பகிர்ந்துண்ணுங்கள் .............
((( அனைத்து உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் )))