இப்படி நாம் காதலிப்போம்பொங்கல் கவிதைப் போட்டி

இப்படி நாம் காதலிப்போம்.(பொங்கல் கவிதைப் போட்டி)

அன்பு என்ற ஓர் சொல்லில் தொடங்கிடுவோம்!
ஆயிரம் முறை விழிகளை மாற்றிக் கொள்வோம்!

இதயம் இரண்டையும் இடைவெளி இல்லாமல் இணைத்திடுவோம்!
ஈக்கணத்தால் பேசடி என் ஈசானியும் நீயடி!

உண்மையாய் காதலிப்போம் உடல் உரசமல் காத்திருப்போம்!
ஊர்சுற்றி காதலிக்க ஒரவிரல் கோர்த்தால் போதுமடி!

எயிறில் மறையும் முன் சந்திப்போம்,இடகலை இரவில் சிந்திப்போம்!
ஏழுசுரத்தில் காதல் பாட்டிசைபோம் எட்டாவது எட்டில் முடித்திடுவோம்!

ஐயள் நீயே உன்னை அலங்கரிக்கும் அடியேன் நானே !

ஒக்கலை மெலிந்த தேவதையே, என் வாழ்வின் தேவை நீயே !
ஓங்கள் நான் பட்ட காதல் நோய்க்கு ,
ஔடதம் நீ மட்டும் தானடி!
“ஃ”போல பிரிந்திருக்க நாம் என்ன காதலிக்காமலா இருக்கிறோம்!

காவியம் படைக்க காத்திருக்கிறேன் காதலியே
சம்மதம் மட்டும் கேட்டுச்சொல் யுத்தம் இல்லாமல்
தாரம் ஆக்குகிறேன் உன்னை நானடியே!

நாம் நடந்த பாதையில் இன்னும் முளரி பூக்குதடி, உன்
பாதம் பட்ட இடமெல்லாம் பூவனமானதாடி!

மகரந்தம் நாமடி, தேன் அனைத்தும் காதல் வண்டிற்குத்தானடி!
யமுனை நதிக்கரையினிலே நம் கல்யாணவைபோகமே,

ராகு,கேது வாழ்துச்சொல்லவே,
லம்போதரன் மந்திரம் ஓதவே,

வண்ண வண்ண பூக்கலாய் வான் மழை பொழியவே!
வாழ்வின் இருதிவரை “இப்படியே நாம் காதலிப்போம்”!

சந்தனபாரதி.ப

9578277832,

எழுதியவர் : சந்தனபாரதி.ப (13-Jan-15, 7:57 pm)
பார்வை : 97

மேலே