ஆசைக் கனவு
விட்டெறிந்த பந்து
கடல் நீருடன்
மிதந்து வந்து
கரையை மறந்து
மீண்டும் கடலின்
உள்ளே செல்வது
போல்............................
உன்னைக் கண்டு
பயந்து நடுங்கி
ஓடிய ஆசை நீ
திரும்பிச்செல்கையிலே
உன் பின்னாடியே
வருகின்றது நில்லாமல்
உன்னைத் தேடியே
பெண்ணே.............................
வருடி கொடுக்கும்
வாடைக்காற்றை
விரட்டி விட்டு
வாட்டி எடுக்கும்உன்
மூச்சுக்காற்றுதான்
பிடிக்கின்றதடி
கண்ணே......................................
ஆசை அது ஆசையடி
ஓசை கொடுக்காமலே
உசுப்பி எடுக்கின்றதடி
என்னை................................
காசி கொடுத்து
வாங்கவும் காதலுக்கு
கடை இல்லை
விட்டெறிந்து விட்டு
காசிக்குத் சன்னியாசியாகப்
போகவும் மனம் இல்லை.......
நூலகம் நீயாக
வேண்டும் நான்
வாசிக்கவும் நேசிக்கவும்
சுவாசிக்கவும்
வேண்டும்................................
இல்லறம் என்னும்
நல்லறம் காண
வேண்டும் கற்றுத் தரும்
ஆசானாக நான்
இருக்க வேண்டும்..............
நீ வெட்கப் பட்டுக்
கொண்டே படிக்க
வேண்டும் என்
வெள்ளைத்தமிழ்
படித்து விட்டு
பிள்ளைத்தமிழ்
கொடுக்க வேண்டும்
நீ பரிசாக............................
அய்யய்யோ பரிசம்
போடும் முன்பே
பரிசு கேட்கின்றேன்
தனிமையிலே நின்றே....
அடப்பாவி உள் மனமே
சென்றவள் வரவில்லை
சிந்தனையிலே இத்தனை
திருவிளையாடலாடா
உமக்கு! போதுமடா மக்கு........