சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதை போட்டி 2015
எல்லையின்றி சுற்றிவர
சிறகிருந்தபோதும் - சாதி
கத்திக்கொண்டு இறக்கைகளை
வெட்டிக்கொள் வதேனோ..?
சாதிக்கொரு நிறமாக
பொழிவதில்லை மேகம்
மதம் பார்த்து ஆதவந்தான்
உதிப்பதில்லை நாளும்....
சாதிக்கென்று தனிப்பாடம்
ஏதுமில்லை ஏட்டில் - சாதி
சான்றிதழ்கள் கேட்குமுறை
எதற்கிந்த நாட்டில்...?
மதமென்ற சொல்லிற்கு
"வெறி"யென்றே அர்த்தம் - இதில்
எந்த "வெறி" உயர்வென்று
பேசுதல் நிர்வாண வெட்கம்....
நாளைய சமுதாயம் - அது
நம் பொறுப்பு தானே
நாம் பாதை தவறினால்
வருங்காலம் வீணே..?
சாதி ஒழித்து மதம் அழித்து
சமத்துவமெனும் நெறி வளர்த்து
சமதர்மம் உயர வழி வகுத்து
சாதனை பலவும் படைத்திடுவோம்....