நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015

அன்று இரவாமல் வாழ்ந்தான் என் தமிழன்
இன்று இரந்தே வாழ்கிறான் என் தமிழன்
அன்று வந்தவர் எல்லாம் கற்றார் என் தமிழை
இன்று இங்கு வாழ்பவன் கற்க மறுக்கிறான் என் தமிழை
அன்று துறந்து வாழ்ந்தான் என் தமிழன்
இன்று துறவை மறந்து வாழ்கிறான் என் தமிழன்
அன்று கல்வியை போற்றி வாழ்ந்தான் என் தமிழன்
இன்று கல்வியை வாணிபம் செய்கிறான் என் தமிழன்
அன்று கொடை வள்ளல் என் தமிழன்
இன்று கொடை வாங்கும் வள்ளல் என் தமிழன்
அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் என் தமிழன்
இன்று அங்கத்திற்க்காக தமிழ் வளர்க்கிறான் என் தமிழன்
அன்று உறவாய் வாழ்ந்தான் என் தமிழன்
இன்று உறவை பிரிக்கிறான் என் தமிழன்
அன்று பல புலவன் எழுதினான்
என் தமிழனின் வீரத்தைப் பற்றி
இன்று பல புலவன் எழுதுகிறான்
ஒவ்வொருவனின் சுயத்தைப் பற்றி
தமிழனும் தமிழும்! நன்றாகத்தான் வாழ்ந்தது அன்று
தமிழனும் தமிழும்! நன்றாகத்தான் சாகிறது இன்று
நாளைய என்ற ஒன்று என் தமிழுக்கும்! தமிழனுக்கும் உண்டோ? தமிழா!
பெயர்: துரை.ரா
வயது: 26
வதிவிடம்: ஊனத்தூர்
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்:9751584590

எழுதியவர் : துரை (14-Jan-15, 8:30 pm)
பார்வை : 132

மேலே