நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015

முச்சங்கத்தில் தவழ்ந்த தமிழே-எங்கள்
அங்கத்தில் விளைந்த தமிழே

எண்ணில் அடங்கா வார்த்தைகள் கொண்டு
என்னில் நிறைந்த தமிழே!
பிழைக்க வந்த யாவரும் கண்டு
வியக்கும் என் செந்தமிழே

அறிவியலும் அதிர்ந்துபோகும் ஆச்சரியம்!
உன் வளைவிலும் நெளிவிலும் சுழிவிலும்
எத்தனை எத்தனை ஆதாரம்- உன்னை
தமிழ் என்று தமிழகத்துக்கு எடுத்துக்காட்ட...

அண்டத்தில் இருப்பதை சுருக்கி பிடித்து
பிடிப்பிண்டத்தில் உணர்த்திய தமிழா!
இன்று நீ பேசுவது எந்தன் தமிழா?

அறிவியலே அறியாத உலகுக்கு
அடிப்படை வாழ்க்கையாய் அறியவைத்தவனே!
இன்று ஏச்சிக்கும் பேச்சிக்கும் ஆளாகி
இருப்பிடம் விட்டு எங்கயோ அலைபவனே ...


கண்ணில் கண்டதை கடவுளென நினைத்த
கூட்டத்தின் நடுவே தமிழால் பாடி
கடவுளையும் காணவைத்தவனே!

தொலைந்து போனதை எண்ணி
தொலைந்த கூட்டமே!
உன் தமிழும் தமிழகத்தையும் மீட்டு வா! மீண்டு வா!!
நாளைய விடியலோடு விழிக்கட்டும் ஈழ தேசமும்...


**********************************************************************************************************
இந்த கவிதைக்கு நானே முழு உரிமையாளரென்று உறுதி அளிக்கிறேன்.

பெயர்: கோ நாடிமுத்து
வயது: 30
வதிவிடம்: 143 துரௌபதி அம்மன் கோவில் தெரு
பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம்,
614601

நாடு: இந்தியா(தமிழ்நாடு).
அழைப்பிலக்கம்: 98 652 72 302.

எழுதியவர் : கோ நாடிமுத்து (14-Jan-15, 9:16 pm)
பார்வை : 178

மேலே