நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”
இமயமுதல் குமரிவரை தமிழ்கூறிய நல்லுலகு
கல்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழர்
நலிந்து போவரோ நாளை இவரென
நெஞ்சு பதைக்குது தமிழரே கேளீர்
காப்பியனும் வள்ளுவனும் சங்கப்புலவர் பெருமக்களும் கைப்பிடியாய்க் கூட்டிவர
இளங்கோவும் சாத்தனும் கவியுயர்க் கம்பனும் கன்னியவளைக் கரைசேர்க்க
திருமுறையும் திவ்யபிரபந்தமும் ஊட்டி வளர்த்துஉருக் கொண்டவள்
எம்பாரதியும் அவன்தாசனும் எண்ணிலா தீந்தெய்வப்பெருமக்களும்
தேனமுதும் பாலமுதும் தந்துயர, கலையொளியும் நல்லகமொளியும்
தேகமுழுக்க வீசித் தென்பரதக் கண்டமிதில்
தேவாட்சி நடத்தியஎம் தெய்வப்பெண் தேய்ந்துபோன நிலைபாரீர்
பொன்மஞ்சளும் பூச்சூடிய கூந்தலுமின்றி பெற்ற பிள்ளையால் துரத்தப்பட்டு
திக்கற்றகாட்டில் திசைமாறி அலையுமோர் வக்கற்ற கிழவிபோலவள் தவிப்பதைப் பாரீர்
மேலைநாட்டு மோகவிடம் நெஞ்சில்ஏறி
வேலைவாங்க ஆங்கிலம் மாறித் - தமிழன்
தமிழ் மறந்தான்;தனை இழந்தான்;
புகழ் இழந்தான்;இகழ் அடைந்தான்.
தமிழனே துறப்பானெனில் யார்காப்பரோ தமிழை?
தாய்கீர்த்தி அறியா அனாதையாய் அவனும்
தனயனிலாப் பேதையாய் இவளும் காலப்பேராழியில்
கரைகாணா தூரத்தில் வீழ்ந்தினி மாய்வரோ?
நினைக்கையிலே வெடிக்குமிருதயமும் விழியோரமூறும் கண்ணீரும்,
தாய்தமிழேயுனக்கும் தாயுயிரை இனியேனும்
காக்கவிருக்கும் நாளைய கடைசித்தமிழனுக்கும் அர்ப்பணம்.
இப்படைப்புக்கு நானே முழு உரிமையாளர் என உறுதி அளிக்கிறேன்.
பெயர்: நிக்கோலாஸ் பேட்ரிக்
வயது : 26
வதிவிடம் : எண் 154-21,
சென்னை அடுக்ககம்,
திருமங்கலம், சென்னை - 600040
நாடு : இந்தியா
அழைப்பிலக்கம்: 9566 144644