அரிசி என்றால் என்ன தமிழா - சந்தோஷ்

ஆதி தமிழன் கொண்டாடிய
பொங்கல் திருநாளினை
பாதியாவது கொண்டாடி மகிழ்வோம்.
தமிழா.. பாதியாவது
அறிந்து கொண்டாடுவோம்.

பாய்ந்தோடியது அன்று
நதியும் ஆறும்
நிறைந்துக்கிடந்தது
குளமும் குட்டையும்.

உழுவு ஒன்றே தொழில்
என்றே கொண்டாடினான்
நம் முப்பாட்டன்.

வேளாண்மையில் தனித்துவ
மேலாண்மை படைத்தான்.
தானிய விதைகளை
தானே விதைத்தான்.
அறுவடை செய்தே
அறுசுவையினை கண்டான்.


காக்கைக்கும் குருவிக்கும்
காப்புக்கட்டி காப்பாற்றினான்.
சுயநலமற்று வாழ்ந்தான்.
உழுவுக்கு உதவிய
கால்நடைகளை மதித்தான்.
சூரியனை வணங்கினான்.

பொங்கல் திருநாளே
தேசிய விழா என்றே
சொந்தங்களோடு
பொங்கலோ பொங்கல்..!!
பொங்கலோ பொங்கல்..!
பொங்கலோ பொங்கல்..!!
என
கூவி கூவி
கூடி கூடி
வெகுளி மனிதனாய்
மானமுள்ள தமிழனாய்
கொண்டாடி வாழ்ந்தான்...!

நாகரீம் வளர்ந்ததாம்.
தாரளமயமாக்கல் என்றது
இந்த விஞ்ஞானம்.
வியாக்கினமாய் நாமும்
தாரளமாய் பண்பாட்டு
உடையின்றி
நாகரீக நிர்வாணமாகிவிட்டோம்..

நாளைய உன்
தலைமுறையினருக்கு
அரிசி என்றால்
எதை எடுத்து காட்டுவாய்...?
தமிழா எதை
அள்ளி காட்டுவாய் ?

ஆதி தமிழன் விட்டுச்சென்ற
பாதி பண்பாடு இன்னுமிருக்கு..!

மீதியாய் தமிழ்மானமும் இருக்கு..!
சிந்திக்க தெரிந்தால் நீ
சந்திக்க மாட்டாய் - இனியும்
ஒரு பட்டனி சாவினை...!

ம்ம் ஆகட்டும் வா...!
தமிழா......!
இந்த வருடம்
காவேரியும் வரவில்லை
நிலமும் ஈரமில்லை
நெல்லும் விளையவில்லை
இருந்தாலும் நம்பிக்கையோடு
கொண்டாடுவோம்
ஒர் இனிய பொங்கலை..!

எங்கே உற்சாகமாய்
ஒரு குரல்கொடு பார்க்கலாம்..!

பொங்கலோ பொங்கல்....!
பொங்கலோ பொங்கல்.....!!



-- இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (14-Jan-15, 7:30 pm)
பார்வை : 222

மேலே