நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015” - வினோதன்

பிறமொழிகள் கருவிலிருந்த போதே
பேரக்குழந்தை பெற்றெடுத்தது தமிழ் !
பிற இனங்கள் அரிச்சுவடி கற்றபோதே
பல துறைகளிலும் கரைகண்டவன் தமிழன் !

கலப்படமே ஆட்கொல்லியெனில்
கலப்பட பொருளை முழுதாய் உட்கொள்வது ?
பணம் காய்க்கும் மொழியே உயர்வெனயெண்ணி
தாய்மொழி மறந்தவன், தாய் மறந்தவனே !

மேற்கத்திய முறைத் தழுவல்கள் யாவுமே
நாகரிக போலிகளே, மொழி உட்பட !
பூனைகள் புலியாய் வேடமிடலாம்
புலிகளேன் பூனையாய் ! புலியொத்தது தமிழ் !!

முன்னெழுத்தை ஆங்கிலத்திலும் - பெயரைத்
தமிழிலும் எழுதுவது எவ்வகை வியாதி ?
ஆங்கிலேயன் இவ்வகை பிழைசெய்து கண்டதுண்டா ?
இவ்வகை கலப்படங்கள், கொலைக்கொப்பானவை !

இனக் கலப்படம் செய்யத்துடிக்கும்
கீழ்தேச செந்நாய்கள் போலவே,
மொழிக் கலப்படம் செய்து சென்ற
ஓநாய்களும் வன்மையானவையே !

தமிழென்னும் - ஓர் புள்ளியில் குவிந்து
சுழல ஆரம்பித்தால் - உலகத் தமிழருக்கோர்
நிரந்திர நிறத்திலோர் விடியல் பிறக்கும் !
வளர்க்கவெல்லாம் வேண்டாம் ! உள்ளதை கொல்லாதிருப்போம் !!

இவை என் சொந்த வரிகளென உறுதியளிக்கிறேன்

இர.வினோத்கண்ணன் பி. ஹெச்டி
இணை ஆராய்ச்சியாளர்
உயிர்தொழிற்நுட்பவியல்
இந்திய தொழிற்நுட்பக் கழகம் - மெட்ராஸ் (IIT Madras)
சென்னை - 600 036
அழைப்பிலக்கம்: 9894326328

எழுதியவர் : வினோதன் (15-Jan-15, 3:23 am)
பார்வை : 102

புதிய படைப்புகள்

மேலே