தைப்பொங்கல்

எங்கும் கடவுள் இருக்கின்றான்
இங்கே அவனை யார்கண்டார்
கண்கள் தன்னில் தெரிகின்ற
கதிரவன் தன்னை தொழுதேத்த
தங்கள் தங்கள் முற்றத்தில்
தமிழர் வைப்போம் தைப்பொங்கல்
பொங்கும் பொங்கல் பால் பொங்கல்
பொங்கலோ பொங்கல் தைப்பொங்கல்
எந்த்த் தொழிலுக் கெந்நாட்டில்
இதுபோல் திருநாள் யார்கண்டார்
எந்த நாளும் திருநாளா
இதனை விடவும் மே(ல்)நாளா?!
உந்திக் குணவு தரும் உழவுக்
குதவும் உதய சூரியனை
புந்தியில் வைக்கும் பால்பொங்கல்
பொங்கலோ பொங்கல் தைப்பொங்கல்
சாமி என்று முதற்கோளை
சாப்பிட அழைக்கும் தைப்பொங்கல்
சேமிப் பென்னும் குறிக்கோளை
சேவிக்கத்தான் தைப்பொங்கல்
நாமிந் நாளில் விதைநெல்லை
நாழியில் வைத்து துதிக்கின்ற
பூமித் தாயின் தலைப்பொங்கல்
பொங்கலோ பொங்கல் தைப்பொங்கல்!

எழுதியவர் : சு.ஐயப்பன் (15-Jan-15, 10:08 am)
பார்வை : 101

மேலே