தைப்பொங்கல் தமிழர்திருநாள் நல்வாழ்த்து

பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -குறள் (1031)

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
*******************************************************

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

வான்மழையை, செங்கதிரை, புத்தாண்டை, வள்ளுவத்தை, ஏர் உழவை, முத்தமிழைப் போற்றுகின்ற பொங்கல் பெருவிழாவில் பொங்கும் இன்பம் எங்கும் தங்குக! எங்கும் பரவுக!

பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

எழுதியவர் : (15-Jan-15, 12:19 pm)
சேர்த்தது : பெ. முரளி
பார்வை : 445

மேலே