நாளைய தமிழும் தமிழரும் o0o பொங்கல் கவிதைப்போட்டி 2015
நாளைய தமிழும் தமிழரும் o0o பொங்கல் கவிதைப்போட்டி 2015
பண்பாடு வீரம் கொண்டே வாழ்ந்தவர் நம் தமிழரினம்
மாறாது வாழ்ந்திடுவார் இவ்வுலகம் உள்ளளவும்
அதிமதி கொண்டோரெல்லாம் தமிழரென்றேயாவார்
அகிலத்தில் உயர் பதவி அவருக்கென்றேயாகும்
முப்பது ரூபாயில் மூவேளை உணவிங்கு ஆனதனால்
வேற்று மாநிலத்தான் வந்தேதான் குவிகின்றார்
உடல் கொழுத்த வேளையிலே உன்மத்தம் புரிகின்றார் - தமிழா
மெத்தனம் ஏனோயின்னும் விரட்டவனை இன்றே இன்னே
உன்னை சுற்றியுமே அணைக்கட்டு எல்லையிலே - தமிழா
அண்டை மாநிலத்தான் ஆக்குகிறான் உறங்காதே
கண்ணயர்ந்து உறங்கிவிட்டால் உயிர் வாழ நீரேது
கடப்பாரை கையிலெடு அணையுடைத்து இளைப்பாறு
இயலிசை நாடகத்தில் நடமிட்ட தமிழன்னை
பல்லிடுக்கில் நல்லெலும்பாய் கடிபட்டு கதறுவதோ
எம் தமிழா பைந்தமிழை பக்குவமாய் நீ பழகு
கற்கண்டாய் இனிக்காதோ கன்னித் தமிழழகு !!!
தமிழிலக்கிய தேனாறு வலைதள அணைக்கட்டில்
திமிறி வழியுது பார் தமிழா அள்ளி நீ பருகு
தெவிட்டாத இன்பமது உண்டு உண்டு நீ மகிழு
அந்த சுவை உலகறிய எடுத்துக் கொஞ்சம் நீ ஓது
அமேசான் காட்டினுள்ளே ஒளிபுகா இடத்தினிலும்
தங்கு தடையின்றி அன்னை தமிழ் புகுந்திடுவாள்
பிரளயமது வந்தேதான் இப்புவியை அழித்தாலும்
தமிழன்னை வேற்றுலகில் தாவியே தடம் பதிப்பாள் !!!
(இப்படைப்பு நான் எழுதியது மற்றும் எனக்கு சொந்தமானது என்று உறுதியளிக்கிறேன்)

