பொங்கல்
பொங்கல்!
நம் மண்ணுக்கு பெருமை
பொங்கலின் இனிமை!!
சுட்ட செம்பானையில்
இனித்து கிடப்பது
தமிழ்மக்களின் பண்பாடு!!
தைத்திருநாளை கொண்டாட
அசுரன் எவனும்
சாகவேண்டாம்!!
சாதியையும் மதத்தையும்
இங்கே அழுக்காய்
வெளித்தள்ள பொங்கட்டும்!
தனித்துவம் செறிந்த நம்
அன்பு - பாசம்
கருணை - நேசம் எல்லாம்
குலவேற்றுமை தணல்தணிக்க
பொங்கட்டும்!
-Dr.சூர்யா