மாட்டுப் பொங்கல் ஒரு கவிதைச் சிந்தனை

மாட்டுப் பொங்கல் விழாவிற்காக
வள்ளுவர் ஔவை- யுடன் இணைந்து நான் :--

எழுது எழுது
எழுத்தினில் எருது பற்றி
இன்று எழுது
உழுது பயிரிட்டு
உண்டிக்கு சோறிடும்
உழவனைப் பற்றி
இன்று எழுது
மற்றவை பற்றி எழுதுதல்
இன்று பழுது !

உழவனின் உயிர்த் தோழி ஔவை மூதாட்டி சொல்கிறார் :--

ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே --ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு .

வள்ளுவப் பெருந்தகை இனொரு விதமாகச் சொல்கிறார் .எப்படி ?

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை

மாடு அல்ல ---மாடு என்றல் செல்வம் என்று . பொருள் .
இங்கு செல்வம் என்னும் சொல்லை மீண்டும் ஏன் பயன்படுத்தவில்லை வள்ளுவர் ?
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்தில் எல்லாம் தலை

இரண்டடி குறட்ப்பாவில் வள்ளுவர் எவ்வளவு செல்வத்தை வாரி இரைத்திருக்கிறார். செல்வம் என்று பொருள் தரும் மாட்டினை பெய்ததின்
காரணம் உழுது பயிரிடும் உழைப்பாளியின் உயிர் உழவுத் தோழன்
உண்டிக்குச் சோறும் வாழ்வும் வளமும் பொன்னும் பொருளும் செல்வமும்
அள்ளித்தரும் உழவு நண்பன் மாட்டினை நாம் நம் செல்லமாக செல்வமாகப்
போற்றவேண்டும் மறந்துவிடக் கூடாது என்பதற்காக மாடு என்ற சொல்லைப்
பெய்தார்.
ஆதலினால் கேடில் விழுச்செல்வம் மாடு மாடு மாடு
நீங்க ஏத்துக்கிறீங்களோ இல்லையோ மாடு ஆமா ஆமா ன்னு மன்டையாட்டுது
கழுத்துச் சலங்கை சத்தம் காதுல வந்து கேக்குது.

பி. கு. : மனுசனோ மாடோ வேலைசெய்யிற மாடு நல்ல மாடு மற்றதெல்லாம்
விருதா மாடு .
-------தூய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகளுடன் ,
. ----உழவுத் தோழன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-15, 6:07 pm)
பார்வை : 467

மேலே