பொங்கல் திருநாள் வாழ்த்து
![](https://eluthu.com/images/loading.gif)
சென்னையிலிருந்து முன்னாள் தமிழக அமைச்சர் கவிவேந்தர் வேழவேந்தன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப் பா!
எண்ணத்தால், அன்பால், பண்பால்
...என்நெஞ்சில் வாழு கின்ற
கண்ணியச் சுடரே! தாங்கள்
...காலத்தை வென்று வாழ்க!
வெண்பனிப் பாழ்மூட் டத்தை
...விரட்டியே வந்தி ருக்கும்
கண்ணான பொங்கல் நாளில்
...கனிவோடு வாழ்த்து கின்றேன்! 1
'பொங்கட்டும் பொங்கல்! நெஞ்சில்
...பூக்கட்டும் மகிழ்ச்சி! எங்கும்
தங்கட்டும் வண்மை! ஓங்கித்
...தழைக்கட்டும் இன்பம்! தூக்கில்
தொங்கட்டும் துயரம்! நன்கு
...துலங்கட்டும் நலங்கள்!' என்றே
மங்கலச் சொற்க ளாலே
...மகிழ்வோடு வாழ்த்து கின்றேன்! 2
......என்றென்றும் வாடாத அன்புடன்,
......கா.வேழவேந்தன்
சென்னை 4
04.01.2015