எண்ணத்து எழுந்த திதுபார்க்க எண்ணம் -16028
பொள்ளாச்சி அபியின்- எண்ணம் 16028
வனத்தில் மிதந்தயிசை வானத்தில் இன்று!
கனத்து மகிழும் எழுத்து!
என்,இரவும் தேனீர் எழுத்துத் தளம்கோப்பை
மின்னிரவே எல்லாம் இனி!
சன்னல் எழுத்தாகச் சற்றே திறந்தார்கள்!
பின்னுகின் றார்கள் பலர்!
கம்பத்தின் மேல்,நின்று காணும் கருடனின்
தெம்பும் எழுத்து தரும்!
ஒற்றை இறகாய் உலகெலாம் என்னையும்
சுற்ற விடுதே எழுத்து!
===== ======