வினோதங்கள் பலவிதம்

ஆயிரமாயிரம் ஏழைக்கு அன்னமிட்டான் பசியாற
தன்னன்னையை விட்டுவிட்டான் ஆசிரமத்தில்

ஒவ்வொரு கோவிலாக ஏறிஇறங்குகிறான் குழந்தை வேண்டி
குழந்தையாக்கிய பெற்றவரை தவிக்கவிட்டு

கருப்பை வெள்ளையாக்க கட்டுகிறான் ஆலயம்
வருமானவரி கணக்கில் வராதபணம்

உப்பைதின்னவன் தண்ணிகுடிப்பான்
தொப்பைபெருத்தவன் தண்ணியடிப்பான்

காவியுடையிளிருந்து கற்பை பறிப்பவன் ஆசானாம்
கத்திகூப்பாடு போடுது தினக்கூட்டம்

எழுதியவர் : கனகரத்தினம் (17-Jan-15, 9:49 am)
பார்வை : 59

மேலே