பிறந்தநாள் வாழ்த்து

என் மனதில் அன்பை விதைத்த என் இனியவளே...
உன்னை இந்த பூவுலகிற்கு தந்த உன் அன்னைக்கு முதல் நன்றி...
உன்னை என் வாழ்வில் சுடர்விடச் செய்த உன் தந்தைக்கு இரண்டாம் நன்றி…
உன்னால் என் வாழ்வை மலர செய்த கடவுளுக்கு மூன்றாம் நன்றி…
என் கனவெல்லாம் உன் முகம்…
உன்னை பிரியாமல் இருப்பதே நான் கேட்க போகும் வரம்…
இவை நடந்தால் நம்மை போல் யாரும் அறிய மாட்டார்கள் மகிழ்ச்சியின் தரம்…
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…அன்பே
வாழ்க வளமுடன்

எழுதியவர் : கவிமோகன் (17-Jan-15, 10:01 am)
பார்வை : 133

மேலே