சுதந்திர நாட்டில் எழுத்துரிமை பறிப்பு ஏன்
சுதந்திர நாட்டில் எழுத்துரிமை பறிப்பு ஏன் ?
பெருமாள் முருகன் எழுதிய கதையில்
திருமண மாகி கருவுராப் பெண்கள்
திருவிழா நாளில் விருப்பம் கொண்டு
ஒருநாள் சென்று பிறஆண் மூலம்
பெற்றனர் பேறு என்று
வால்மீகி நல்கிய காவிய மதனில்
ராமன் மணந்த ஜானகி தேவியைக்
கடத்தி இராவணன் அசோக வனத்தில்
காவல் வைத்துக் காத்திருந்தான் திருமணம்
செய்ய சம்மதம் வேண்டி
வியாசர் நல்கிய காவிய மதனில்
வம்சம் தழைக்க விசித்ர வீர்யன்
மனைவியர் இருவர் சம்மதம் இன்றி
இருட்டில் கர்ப்பம் கொடுத்ததார் துறவறம்
பூண்ட முனிவர் என்று
பெருமாள் முருகன் நல்கிய கதையில்
இதுபோல் நிகழ்வுகள் இருந்த தாக
எழுதிய பின்பு வெகுண்டெழுந்து சிலரைத்
தூண்டிக் கலவரம் செய்தது
அரசியல் லாபம் கருதி
மதசார் பின்றி நல்லோர் இயற்றிய
அரசியல் நிர்ணயச் சட்டம் அளித்த
உரிமைகள் பறிக்கும் அமைப்புகள் பற்றி
எடுத்துச் சொல்ல வேண்டும் மக்கள்
அறியா திருப்பின் அரசு
சுரக்கும் விந்து அணுக்கள் அதனில்
இருக்கக் குறைவாய் பிறக்கா சிசுவென்
றறிந்த உலகோர் விந்து வங்கிகள்
நிறுவிடும் நேரம் நடக்கும் நமக்குள்
ளொருபோ ராட்டம்