பொங்கிய பொங்கல்

அந்த நாட்களில், இந்நாள் தமிழ் புத்தாண்டோ
தமிழர் திருநாளோ தெரியாது...
நான் கற்றது தமிழ் பேசும் விவசாயி
இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளே...
அம்மாவின் கை வரைந்த அரிசி மாக்கோலத்தில்
புரண்டெலுந்து உடலெள்ளாம் வெள்ளை பூசி
அக்கா தங்கை தீட்டிய வண்ணக்கோலத்தில்
சண்டையிட்டு வண்ணம் தெளித்து..
குளுருதே இன்னும் மார்கழி பனி என்று
குளத்தில் நண்பர்களுடன் குளத்தெலுந்து..
மாவிலை,பீலை பூ,அருகம் தேடிக்கொணர்ந்து
அம்மா,அத்தை,பாட்டி சேர்ந்து அடுப்பு மூட்டி வைத்த
கரிபுகைக்கு கண்ணீர் விட்டு
பாப்பையா பட்டிமன்றம் பார்கையிலே
அப்பா சாமி கும்பிட கூப்பிட
தீர்ப்பு கேட்கமலே பாதியில் பெட்டியை அனைத்து.
எங்கள் நிலத்து நெல்லை திரு நாமம் தீட்டிய
ஒரு ஆலாக்கு படியில் பூக்களுடன் வைத்து
வாங்கி வந்த கரும்பு,தோண்டி எடுத்த கிழங்கு
மலை விவசாயி தந்த காய்கறி, குடும்ப பொங்கல்
இவை எல்லாம் வாழை இலையில் அலங்கரித்து
மாமா தீபாரதனை காட்ட சேர்ந்து நின்று
வணக்கம் சொல்லி நன்றி செய்து..
பெரியம்மா அவித்த கிழங்கும்,
பெரியப்பா வெட்டி தந்த கரும்பும்
அன்னன் அன்னிகளுடன் சேர்ந்து உண்ட
பொங்கலும்...நினைத்தாலே தித்திக்கும்
நிணைவுகளுடன் என் நெஞ்சில்...
இவை எல்லாம் இனி
நிணைவுகள் தானோ..
மாகோலமிட மண்தரை இனி இல்லை
கனிப்பொறி வரைந்த வண்ண கோலங்கள்
அழகாய் டைல்ஸ் தரையில்..
மானியமாய் வந்த எரிவாயுடன்
பன்னாட்டு மளிகை கடையில் அரிசியும் வாங்கி
மங்கலமாய் பொங்கலும் வைத்து,
எதோ ஓர் கடமையாய்
அலுப்புடன் தூங்க சென்றார்கள்
கிராமத்து தமிழர்கள்..
பாரம்பரியமாய் மாடுகளுடன் பொங்கல்
வைத்த விவசாயி சாத்திரம் சொல்லி
காமதேனு படத்திற்கு பொங்கல் படைக்கிறான்
வருடா வருடம் பொங்குவது பொங்கல் மட்டும் அல்ல
நாம் சீரழிக்கின்ற பாரம்பரியமும் பண்பாடும்
ஏக்கங்களுடன் பொங்கிகொண்டுள்ளன..
பொங்கி வழிந்து நம்மை விட்டு விலகி செல்லும்
காலம் என்றோ???

எழுதியவர் : க.ஹேமநாதன் (18-Jan-15, 10:05 pm)
Tanglish : pongia pongal
பார்வை : 93

மேலே