யார் பக்கம்
மனிதப் படைப்பை எண்ணி எண்ணி
பூரித்த புத்திசாலி இறைவனை..
..
நிர்வாணமாய் திரிந்த
மனிதனுக்கு
ஆசையைக் கொடுத்து..
ஆடையை கொடுத்து..
நாகரீகம் தந்து..
மனதின் நிர்வாணமும்..
மறைக்கும் மொழியும் ..
பேச்சும்..மூச்சும்
முயலாமலே வெற்றி பெறும்
வித்தையும்..
கற்றுக் கொடுத்து..
..
தோற்கடித்த சாத்தானே..
..
மனிதகுலம் உள்ள வரை
நீடிக்கும் உனது ஆட்சி..!
..
பாவம்..விலங்குகள்!
அவை.. உடலின் நிர்வாணத்தையும்..
மனதின் நிர்வாணத்தையும்..
மறைக்க தெரியாமல்..
படட்டும் அவதி..
அதுவே அவற்றின் தலை விதி!
அவற்றில் விதிவிலக்குகள் இல்லை!
அவை படைத்தவன் பக்கமே இருக்கட்டும்..
ஆனால்.. நாங்கள் எப்போதும் உன் பக்கம்..!
எங்களில் சில விதிவிலக்குகள் இருந்தாலும்
அதனால் பாதகம் ஒன்றுமில்லை..உனக்கு !