இவ்வளவேனும் காதல் செய் - பாகம் 5

நித்திலனின் முகம்கண்டு
நண்பன் நிலை யறிந்துக்கொண்டு
ஆறுதலாய் பேசலானான் - அவன்
அலுவலக நண்பனொருவன்...

சந்திரவதனா என்றே
சதா வாடுவது அழகல்ல - நீ
சென்று ஒருமுறை அவளை
சந்தித்து விடுத் தோழா...

நித்திலன் யோசித்தான்
அன்னையும் வாவென்கிறாள்
அவள் நினைவும் வாவென்கிறது
சென்றுவிட்டால் என்ன...?

ஒப்பந்தக்கால மின்னும்
சில மாதம் இருக்கிறது
எனை ஆக்கியவளையும்
எனக்கான வளையும்
சந்தித்தே தீரவேண்டும்....

சிந்தையில் பதித்தவன் - சற்று
கலங்கித்தான் போய்விட்டான்

"சந்திரவதனா"

நீ யாரென சொன்னால் - இவ்வுலகம்
எனை மூடன் எனலாம்
கிறுக்கன் எனலாம்
ஏளனம் செய்யலாம்.....

நான் என்ன செய்வேன்..?
நீ இருக்கிறாயா..?
இருப்பாய்... நான் இருக்கிறேன் ...
நிச்சயம் நீயும் இருப்பாய்....

நீ கவிதை
நான் காதல்
நம்மை பிரிப்பவர் யார்...?

நீ தமிழ்
நான் இசை
நம்மை அழிப்பவர் யார்...?

வந்துவிடுகிறேன் - என்
வாலிபத் தோட்டத்தின்
வரவேற்பு மலர்விழியே
வதன சுந்தரியே - இதோ
வந்துவிடுகிறேன்.....

சோழ நாட்டுக்கு - என்
சுவர்கமே நீ இருக்கும்
சுந்தர நாட்டுக்கு - உனை
சுயம்வரம் முடிக்க - இதோ
வந்துவிடுகிறேன்....

பயணத்திற்கான ஏற்பாடுகளில்
உற்சாகமானது நித்திலன் மனது....

(தொடரும்)

எழுதியவர் : யாழ்மொழி (19-Jan-15, 6:05 pm)
பார்வை : 127

மேலே