வெளிப்பாடு

இரு மனங்கள் மௌனத்தில்
எழுத முனையும் கவிதை
இன்னும் நல்ல வாய்ப்புக்காக
சொல்ல தயங்கிய கவிதை
நேரம் காலம் சேரும் பொழுது
பொங்கி ஆர்பரிக்கும் கவிதை
காற்று வெளிச்சம் இரண்டுக்கும்
கூட தெரியாமல் பீறிடும் கவிதை
இரு உடல்கள் மௌனத்தில்
எழுத முனையும் கவிதை
அடுத்த வாய்ப்பு அமையும் வரை
எதிரொலியாய் ரீங்கரிக்கும் கவிதை