பச்சைத் துரோகம்

நான்கு சுவர்களுக்குள்
மயான விழிகளின்
ஓரப்பார்வை..

கழிவிறக்கத்தில்
நெளியும் புழுக்களென
யூகிக்கப்படும் நினைவுகள் ...

மாண்டபின் உயிர்தேடும்
உடலைப் போலொரு
கனவும் கலைதல் ...

இன்றைய
காணாத வானத்தில்
விண்மீன் புரளிகளாய்
பழகிய நாட்கள்...

உமிழ்நீர் வழியே
உக்கிரமாகும் மனதின்
இறுதி ஆயுதம்....

சாக்கடையில் சந்தனம்
சாக்கடை தான்....
இனியொரு விதிசெய்யும்
நிர்மூலமும்....

காலணி ஒட்டிய
மண்ணுக்குள் பிரவேசிக்கும்
நச்சுக்கும்
நரகமாகும் வேதனையில்
உதறக் காத்திருக்கும்
கெஞ்சல் .....

உறவாடும் உதடுகளின்
நுனிப்புல் மேயும் கௌரவம் ...

எழுந்தோடு துரோகமே
வாழ்வெனும் குகையுனக்குப்
பாவத்தின்
இருண்ட மூச்சுக்களின்
வாக்குமூலம்....!!!

எழுதியவர் : புலமி (19-Jan-15, 11:17 pm)
பார்வை : 3274

மேலே