அஸ்தமனத்தில் ஓர் விடியல்

உரிமைகள் சில மறுக்கப்பட்டதால்
உண்மைகள் பல புதைக்கப்பட்டதால்...
உணர்வுகளை உறங்கவைத்தேன்..

உள்ளத்து உரசல்கள்
உலையாய் கொதித்து
உணர்வுகளின் உறக்கத்தை கலைத்து
உரக்கச் சத்தமிட எத்தனிக்கின்றன.
உதடுகளும் பிரிந்து வழி விடுகிறது..
ஆனால்,,
குரல் வளை ஏனோ இன்னமும்..ஒலியெழுப்பவில்லை...

எப்பொழுதோ ஒருபொழுதில்..
யாரோ எங்கோ சொல்லி கேட்டதாய்..ஞாபகம்...
தடுமாறலாம்,,,ஆனால் தடம் மாறக்கூடாது....
தடுமாறி கவிழ்ந்துவிட்டோம்... ஒருமுறை
பாடு பட்டு எழுந்துவிட்டோம் மறுமுறை

ஆனால்.. ஆச்சரியம்..
முன்னாலே பல வழிகள்...
அந்தோ பரிதாப‌ம்...
முன்னாலே..? நாம் வந்த வழியோ முடிந்(த்)து விட்டது
இப்போ நான் தடம் மாறவா?..
இல்லை இது தவறென்று..முடித்துவிடவா பயணத்தை...

கனவுகள் கனவாகவே கரைந்து விட விடலாமா??????
இல்லை தடம் மாறி தடுமாற்றத்தை தடுப்போமா???
இன்றய அஸ்தமனத்தில் தடுமாற்றத்திற்கு ,,,,
தடம்மாறி விடியல் பாதையா ?
இல்லை..நாளைய விடியலில் எனக்கு ஒர் அஸ்தமனமா,,,

தடம் மாறவா? இல்லை தவறு இதுவென்று தவிர்க்கவா?????????????????

எழுதியவர் : அஜந்தா ஜினி பகீரதன் (20-Jan-15, 10:49 am)
பார்வை : 92

மேலே