இலவசங்கள்

இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு
இலவச மின்விசிறியப் போட்டு
இலவச டிவி -யப் பாத்துக்கிட்டு
நோய் வந்தா
இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று
இலவச 4 கி தங்கத்துடன்
இருபத்தைந்தாயிர ம் ரூபா வாங்கி
கலியாணம் பண்ணி
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச சத்துணவுடன்
இலவச கல்வியும் நல்கி
இலவச பேருந்து பாசுடன்
இலவச முதியோர் பென்சன்
கிடைக்கும்போது
எனக்கு எதுக்கு வேலை?

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க .......................

எழுதியவர் : விவேகா ராஜீ (20-Jan-15, 11:06 am)
சேர்த்தது : விவேகா ராஜீ
Tanglish : ILAVASANGAL
பார்வை : 264

சிறந்த நகைச்சுவைகள்

மேலே