காதல் சொல்ல வேண்டும் நீ இப்படி

சூரியனின் சூடெல்லாம்
சும்மா கடந்து போனேன்
நீ பாத்த பார்வைல
நீர் வற்றி போனேன்

தண்ணிக்குள்ள விழுந்துபுட்டா
தரைக்கு ஏறி வருவேன் - உன்
கண்ணுக்குள்ள விழுந்துபுட்டேன்
கறைக்கு எப்போ வருவேன்?

உறைக்குள்ள இருந்த வாளாக இருந்தேன்
உன் வாசம் பட்டதும் - நான்
உறைநிலையை அடன்சேன் இந்த
உலகத்தையே மறந்தேன்

பருவத்தின் மாறுதலா இல்லை
பாசத்தின் தவறுதலா - உன்
பாதையெல்லாம் என்
பாதம் பதிச்சேன்

உடம்பெல்லாம் பூ பூக்க
உள்ளுக்குள்ள காய் காய்க்க
காலம் கனிஞ்சு வர அது
காதலுன்னு நான் உணர்ந்தேன்

பூச்செண்டில் வைக்க எடுத்த
பூப்போல - ஒரு
பூவொன்னு எடுத்துகிட்டு
பூவிழிய பார்ப்பதற்கு புறப்பட்டேன்

புதிர் போட்ட விழி இன்று
புதிதாக என் முன்னே - இரு
புள்ளிகளால் கோலங்கள் போடுதிங்கே
புரியாமல்

புன்னகைத்தால் புரியவில்லை
பின் நகைத்தாள் புரியவில்லை - என்
கையிலொரு காகிதத்தை திணித்துவிட்டு
கையெடுத்தால் புரியவில்லை

காகிதத்தை பிரித்து பார்த்தேன்
காதல் சொல்லவந்தால் புரிந்து கொண்டேன்! - என்
கண்களால் காதலை அவள்
கண்களுக்குள் பரிமாற

காதல் ஒன்று பிறந்ததது என்
காதல் இன்று பிறந்ததது- என்
கற்பனையில் பிறந்தது அது
கவிதையாக பிறந்ததது

எழுதியவர் : தினேஷ் (20-Jan-15, 1:52 pm)
பார்வை : 83

மேலே