ஆறாம் வகுப்பு அருணா

அப்பா தலை நிமிர்ந்து
நடக்க வேண்டும் என்கிறார்?!.....
அம்மா தலை குனிந்து
நடக்க வேண்டும் என்கிறார்?!....
நான் என்ன செய்ய?!......

பூக்கோலம் போட்டவள்
மை கசிய
"ஐயோ" என்றால் - அருணா
"அப்பாடா" என்றால் அத்தை
அமைதியானாள் அம்மா?!......

அம்மாவை
"வாடி" "போடி"
என்று அழைக்கும் அப்பா
என்னை மட்டும்
"வாம்மா" "போம்மா"
என்று அழைக்கும்
அர்த்தம் புரியவில்லை?!....

வீட்டுப் பாடம் மறந்த என்னை
ஆசிரியர் அடிக்க மறுக்கிறார்?!.....
காது கிள்ள மறந்து கன்னம் கிள்ளி
சமத்து என்கிறார் ஆசிரியை?!.....

புதிய பித்தளைப் பானை
புதுப்பிக்கப்போவது ஏன்?!......

அண்டா வாங்கி வந்த அத்தை
அரசு மானியத்தில் கழிவறை கட்டும்
ஆலோசனை கூறினால்!!....
பாட்டோடு பாடா அதையும்
பார்பதாக அப்பா கூறினார்!!....
அதான் அவ அத்த வீட்டுலே இருக்குதே?!.....அம்மா

எழுதியவர் : வைகை அழகரசு (21-Jan-15, 3:00 pm)
பார்வை : 75

மேலே