அரசாங்க ஆசனம் எமனது வாகனம்

பாவி பயலுகளே பாசத்தை எண்ணாது
படித்து படித்து சொன்னாலும் கேட்காது
தறிகெட்டு குடித்துவிட்டு தாறுமாறாய்
வண்டியொன்றை ஓட்டிக்கிட்டு
போரதிசை தெரியாமால்
பெட்டியோடு அடக்கமாய்
பிள்ளைகளை தவிக்கவிட்டு
பொண்டாட்டியை புலம்பவிட்டு
பொசுங்கிதான் போறீகளே ...
தண்ணியை போட்டுக்கிட்டு
வண்டியோட்டி போகாதடா
உன்வாரிசை தவிக்கவிட்டு
தீக்கிறையாகதடா ..
கூலிவேலை செய்கின்ற
குடிகார தகப்பனே
குடிக்கதினம் பணம்கேட்டு
கொடுமைபடுத்தும் அரக்கனே
அமைச்சனவன் உன்னாலே
அடுக்குமாடி கட்டுறான்
அதையுணர்ந்து கொள்ளடா ,
பூரணமதுவிலக்கை போற்றடா
பொண்டாட்டி பிள்ளைக்கு பாதுகாப்பு நீயடா ...
அரசாங்கம் திருந்தாது அதுனக்கு புரியாதா
இறப்பது நீயடா இழப்பது உனக்கடா
பணத்திற்காய் வாய்திறக்கும் நடைபிணமே
அரசாங்கம் கட்டு கட்டாய் பணமடுக்க -உன்னை
இரத்தவாந்தி கக்கவைத்து பாடையிலே அனுப்பிவிடும் ..
அரசிருக்கும் ஆசனம் எமனது வாகனம்
எத்துனை பேர் மாண்டாலும் மனசிறங்கி
வாராது மதுக்கடையை மூடாது ...