காதல் உள்ளம் - தாய் உள்ளம்

இவ்வுலகில் நாம்
பிறப்பதற்கு முன்பே
நம்மை நேசிக்கும்
ஒரே உள்ளம் - நம்
தாயின் உள்ளம் .
கருவறை திறக்கும்
முன்பே கண்ணின்
இமை போல் காக்கும்
கருணை உள்ளம் - நம்
தாயின் உள்ளம் .


கரு கொள்ளும் போதே
முதலில் காதல் கொண்டவள்
அன்பின் உள்ளம் -நம்
தாயின் உள்ளம் .
முகம் பார்த்து முகவரி பார்த்து
அழகு பார்த்து
அந்தஸ்து பார்த்து
வரும் இளமைக் காதலை விட
நம் மீது உண்மையான
நேசம் கொண்ட தாயின்
உள்ளம் அது - காதல் உள்ளம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Jan-15, 3:46 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 415

மேலே