துளசிவாசம்

பிரபஞ்சத்தின்
முதல் ஆர்ப்பரிப்பு!!....
"பெண்" என்கிற பிரமிப்பு!!....(பெண்)
நிறை மாதத்தில்
பிறந்த மனிதனிடம்
குறைகள் அதிகம்!!....
பாடலாம் பல பதிகம்?!.... (மனிதன்)
மெழுகுவர்த்தி
அநாதையானது
மின் விளக்கு
ஒளியில்!!......(அநாதை)
கட்டண தரிசனத்திலும்
தெய்வம் கண்ணுக்குத் தெரிவதில்லை?!.....(தெய்வம்)
கரணம் போடும் மனிதன்
சாமியாகிப் போனான்!!....
மனம் பொறுக்காத சாமி
கல்லாகிப் போனது?!....(மனிதன்)
ரத்த பாசம்
போட்ட
முத்த வேசம் (' ') (தாத்தா)
வெற்றி சொந்தமானால்
தோல்வி அநாதை!!....
தோல்வி சொந்தமானால்
வெற்றி அநாதை!!....
வெற்றி தோல்வி சொந்தமானால்
யாருமே அநாதை இல்லை?!...... (அநாதை)