பிச்சைகாரன் நான்

பிள்ளைகள் பெற்றால்
பின்னால் உதவும்
பிள்ளையாய் பெற்றால்
பிடி சாதமாவது கிடைக்கும்.

என்றே பெற்றேன்
பிள்ளைகள் இரண்டு
இரண்டுமே எங்கே?
என்னை விட்டு பறந்தது.

பிள்ளைகள் இருந்தும்
பிச்சை எடுத்தேன்
பிள்ளைகளின் பாச
பிணைப்புகள் இல்லாததால்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Jan-15, 10:58 am)
பார்வை : 75

மேலே