இனிய இல்லறம்

தினம் தினம் லேட்டாக எழுந்து, அம்மா திட்டும் போது 'சீ இந்த அம்மா இப்படித்தான். எப்பபாரு திட்டிக்கிட்டே அப்பா வந்ததும் சொல்ல வேண்டும்', என மனதுக்குள் புலம்பி, அப்பா வந்ததும் வராததுமா அம்மாவை போட்டு அடிக்கையிலே அனைத்தும் மறந்து அம்மாவின் காலை கட்டிக்கொள்வது அம்மாவிடம் அடிவாங்கும் போதும் திட்டு வாங்கும் போதும் அம்மா எதிரியாகத்தான் தெரிவாள். மணம் முடிந்து மாமியார் வீடு செல்லும் போதுதான் தெரியும் அம்மாவின் அருமை.

ஒரு பெண் புதிதாக திருமணமாகி வரும் போது அந்த வீட்டு சூழல் அவளுக்கு புதிது. அவளை சுதந்திரமாக இருக்க விட்டால் நிச்சயமாக அவள்தான் வீட்டின் மகாலட்சுமி. தம்பதியர் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் என்பதால் ஒரே நாளில் மாறமுடியாது. இருவருமே
இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அப்பெண்ணின் மனதில் பயம் இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகமுடியும். புகுந்தவீடும் பிறந்த வீடாக மாற, மாமனாரும் மாமியாரும் அவள் அப்பா அம்மாவாக அவள் மனம் மாறும். எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் கணவனும் மனைவியும் புரிந்து கொள்ளவேண்டும்.

சினிமாவை பார்த்து காதலிப்பது தவறு. அது வெறும் நிழல் மட்டுமே. தொலைக்காட்சியும் அப்படித்தான். சினிமாவைவிட அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துவது இந்த தொலைக்காட்சி. இதில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, இரண்டாவது திருமணம் என்று பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக நிறைய. ஒரு பெண் தாயாக தாரமாக குடும்பத்தை சமாளிக்கும் நிர்வாகியாக எத்தனை பரிமாணங்கள். அனைத்தையும் உணர்ந்து கணவனுக்கு ஏற்ற துணையாக புகுந்த வீட்டின் விளக்காக, பிறந்த வீட்டின் பெருமையும் கலந்து, வாழ்க்கை சிறக்க, கணவனின் அன்பும் அதிகரிக்கும். பிள்ளைகளை வளர்க்க நாம் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

மீள்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (22-Jan-15, 12:38 pm)
Tanglish : iniya illaram
பார்வை : 495

சிறந்த கட்டுரைகள்

மேலே