நாயமா

தன்னனனே னானனன்னே... தானனன தானனன்னே...
தானனன்ன தானனனானே தானனன்னே தானனா?
தானன்னன தன்னானனானே தனன்னானன் னானனா?

நெஞ்சுக்குள்ள நிம்மதிக்கு... நேர்மயான வழிகெடக்க...
போதயேத்தி மனசுகெட்டு குடியும்கெட வேணுமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?

வேசியோட வீட்டுக்குள்ள... தொத்துநோயி காத்திருக்கு...
மாட்டமேய்க்க விளஞ்சவயல் பாக்குறது நாயமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?

மண்ணநம்பி நட்டகன்னு... மாடுதிங்க பாக்குறியே...
வச்சகன்னு கிளைக்குறப்போ அரிக்குறது நாயமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?

பண்ணாத பாவத்துக்கு... பச்சபுள்ள என்னசெய்யும்...
பொட்டப்புள்ள பொறந்திச்சின்னா கொல்லுறது நாயமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?

- சூர்யபுத்திரன் (1994)

எழுதியவர் : Dr CR சூரியகுமார் (23-Jan-15, 11:53 am)
பார்வை : 162

மேலே