அணிவகுப்பு
எறும்புகளின் அணிவகுப்பு
உணவை உறைவிடத்தை
நோக்கியே நகர்ந்து செல்லும்
அவை உளவறியும் உணவறியும்
இனமறியும் இடமறியும்
மனிதர் கண் பட்டுவிட்டால்
கலைந்து விடும் அணிவகுப்பு
மீண்டும் மீண்டும் விட்ட இடம்
தொடர்ந்து செல்லும் அணிவகுப்பு
இதுவும் அழகிய அணிவகுப்பே
ஆனால் மனிதனின் அணிவகுப்போ
ஆய்ந்தறியும் மரியாதை உலகறிய
உச்சகட்ட வரவேற்பு அணிவகுப்பாய்
உவந்தளிக்க இராஜ மரியாதை தருவது
இந்த அணிவகுப்புத்தான்
கடற்படை தரைப்படை விமானப் படை
முப்படையும் அணிவகுப்பில்
சீருடையில் சிறப்புநடை
அத்தனையும் அணிவகுப்பில்
இத்தகைய அணிவகுப்பை
வைத்த கண் வாங்காமல்
பார்த்திடும் நம் மக்கள் அமைதியுடன்
அணிவகுப்புக்கு ஓர் தனி மதிப்பு உண்டு
அது கொடுக்க வேண்டிய தரமும் கனமும்
குறிப்பிடும் நபருக்கே வழங்கப் படும்
அணிவகுப்பின் மரியாதை
சுலபமாகக் கிடைத்து விடாது
ராஜ நடை வீரநடை அமைதிநடை
அத்தனையும் அணிவகுப்பில்
காண்கின்றோம் கண்கொள்ளாக் காட்சியதை