காய்ந்த சருகு
காய்ந்த சருகு .........
சுமை பல தாங்கியே
தோற்று போனவள் ...
சுகந்தத்தை நுகர எண்ணியே
ஏமார்ந்து போனவள் ...
தேடல் எதுவென தேடி
தொலைந்து போனவள் ...
கண்ணீரை தாரைவார்த்து கொடுத்து
காய்ந்த சருகானவள் ...
சருகுகளின் சலசலப்பை
சிரிப்பாக்கி கொண்டவள் ...
சருகாகி போனவள் தான் ...
இளம்தளிருக்கு ஊட்டம் கொடுக்கிறாள் ...
சருகின் பயணம் தொடரும் ...
முடியும் வரையில் ...
- வைஷ்ணவ தேவி