அறிந்து கொள்வோம்

ஐந்து,நான்கு,மூன்று ....

>>முத்தமிழ்- இயல், இசை, நாடகம்
>>முக்கனி -மா, பலா,வாழை
>> முந்நீர்- ஆற்றுநீர், மழைநீர், ஊற்றுநீர்
>>முப்படை- தரைப்படை, கப்பல்படை, விமானப்படை
>>முக்காலம்- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
>>முக்கொடி- புலிக்கொடி , விற்கொடி , மீன்கொடி
>>மும்முரசு- மணமுரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு
>>முப்பால்-அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
>>மூவண்ணம்- சிவப்பு, மஞ்சள்,நீலம்
>>மூவிடம்-தன்மையிடம்,முன்னிலையிடம், படர்க்கையிடம்
>>முப்பகை-காமம்,வெகுளி,மயக்கம்
>>வீரமுரசு- திமுரசு,கொடைமுரசு ,படைமுரசு
[ செம்மையின் சின்னம்-நீதிமுரசு;
வண்மையின் சின்னம்-கொடைமுரசு;
ஆண்மையின் சின்னம்- படைமுரசு ]
>>மூவுலகு - விண்ணுலகு ,மண்ணுலகு,கீழுலகு
>>மூவேந்தர் - சேரர்,சோழர், பாண்டியர்
>>நால்வகை உணவு-உண்ணல்,தின்னல்,பருகல்,நக்கல்
>>நாற்குணம்-அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு
>>நானிலம்-குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல்
>>நாற்பால்-அந்தணர், அரசர்,வணிகர்,வேளாளர்
>>நாற்படை-தேர்ப்படை, யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை (தரைப்படை)
>>நாற்பொருள்-அறம், பொருள், இன்பம்,வீடு
>>நாற்றிசை-வடக்கு,தெற்கு,கிழக்கு, மேற்கு
>>நான்மறை- ரிக்,யசுர், சாமம்,அதர்வணம்
>>ஐம்பொறி -மெய், வாய்,கண், மூக்கு, செவி
>>ஐம்பூதம்-நிலம்,நீர், காற்று,தீ,ஆகாயம்
>>ஐம்பால்-ஆண்பால்,பெண்பால், பலர்பால்,ஒன்றன்பால், பலவின்பால்
>>ஐம்புலன்-சுவை,ஒளி,ஊறு, ஓசை,நாற்றம்
>>ஐவகை நிலம்-குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல்,பாலை
>>ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவகசிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி
>>ஐஞ்சிறுகாப்பியம்-யசோதர காவியம்,உதயணகுமார காவியம், நாககுமார காவியம்,சூளாமணி,நீலகேசி
>>navathaaniyankal

எழுதியவர் : sudarvizhi (23-Jan-15, 9:20 pm)
பார்வை : 1509

சிறந்த கட்டுரைகள்

மேலே