பசி

நான் பிச்சை எடுப்பவன். என் உடல் ஒரு பிச்சை பாத்திரம். நான் கேட்கும் பிச்சை அருள் பிச்சை. ஞானப் பிச்சை. கையேந்தி, மாயத்தில் உருவான அனைத்து ஜீவராசிகளிடமும், ஜடங்களிடமும் கோருகின்றேன், "அம்மா! தாயே! பசி! பசி"" என்று. அருள் பசி, ஞானப்பசி. இந்தப் பசி அடங்க வேண்டுமென்றால் மாயை விலக வேண்டும். மாயையை விலக்க மாயையிடமே வேண்டுகின்றேன்.
மாயையாகிய என் யாக்கை மூலமேயே வேண்டுகின்றேன். மாயை எனும் வலையை விரித்தவன் என்னுள் இருந்து சிரிக்கிறான். " புறத்தே போகப்போக, என்னிடமிருந்து தூரம் போகின்றாய்! அகத்தே வா! என் அருகில் வா!" என்று நவில்கிறான். இப்பொழுதெல்லாம் நான் என்னிடமே, என்னை 'நான்' ஆக்கியவனிடமே, பிறதை, பிறரை பிறதாக்கியவரிடமே, பிச்சை கேட்கிறேன், "அம்மா! தாயே! பசி! பசி"

எழுதியவர் : tssoma எனும் சோமா (24-Jan-15, 7:59 pm)
Tanglish : pasi
பார்வை : 92

மேலே