நல்லதை எங்கிருந்தாலும் நாடுவோம்

[முன் குறிப்பு: தளத்தில் ஏற்பட்ட சில கருத்து மோதல்களுக்கு நான் கொடுத்த கருத்துகளே கட்டுரை வடிவில் உங்களுக்கு...]

இது எந்த மதத்தையும் எந்த நாட்டையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை..
மானுடத்தின் பேரில் அன்பு கொண்டு மட்டும் பதிகிறேன்...

எந்த மதத்தில் எது நல்லது என்றாலும்
அது மக்களுக்கு நன்மையை தருமானால்
அதை எடுத்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை

ஏனெனில் நாம் வாழத்தான் வந்திருக்கிறோம் இவ்வுலகில்
ஏதோ மூட பழக்கங்களில் மூழ்கிக் கிடக்க நாமொன்றும் முட்டாள்கள் இல்லை...
அல்லது படிப்பறிவு இல்லாத பட்டிக் காட்டானும் இல்லை...

சிந்தித்து செயல் பட அறிவு இருக்கிறது...
அதை செயலாற்ற வலிமை இருக்கிறது...
அதை வென்றெடுக்க திறமை இருக்கிறது...
ஆனால் நம்பிக்கை மட்டும்தான் நம்மிடம் இல்லை...
எதை நம்புவது என்ற குழப்பம்...

எது சரியென்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இன்னும் வளர வில்லை என்றால்
எப்போது வளர்த்துக் கொள்ள போகிறோம்...?

எதற்கெடுத்தாலும் இப்படி ஒப்பிட்டு பார்த்து கருத்து மோதல் விடுப்பது
சரி இல்லை தோழரே...

படித்த நாமே இப்படி இருந்தால்
படிக்காத மனிதர்களுக்கு எப்படி இது புரியும்
அவர்களின் பார்வையில் இது எப்படி சென்றடையும்
அல்லது சென்று சேரும்...

இதுதான் நமது முதன்மை கோளாறு...

இங்கு இந்தியாவில் நான் பிறந்ததற்காக
இந்தியாவில் நடப்பதெல்லாம் சரி என்றோ...

என்னுடைய மதம் என்பதற்காக பாகிஸ்தானில் குழந்தைகளை கொன்றது சரி என்றோ
சொன்னால் நான் தான் உலகத்தின் முதல் முட்டாள்...

எந்தவொரு விசயத்துகாகவும்
என் உயிரே போனாலும் தாய் நாட்டை
விட்டு தரமாட்டேன்... மாட்டார்கள்... இந்தியாவில் பிறந்தவர்கள்...
ஏனெனில் இதன் கலாச்சாரம் அப்படி...

ஆனால் இங்கு பேசப் படுவது கலாச்சாரத்தைப் பற்றி அல்ல...
சில கழிசடைகளை பற்றி மட்டுமே...

அதை புரிந்து கொண்டால் மட்டும் போதுமானது...

தயவு செய்து எந்த ஒரு விசயத்துகாகவும்
மதத்தையோ நாட்டையோ ஒப்பிட்டு மோதல்கள் வேண்டாம்...

இந்தியரின் சிறப்பே இந்த வேற்றுமையில் ஒற்றுமைதான்...
அதை இது மாதிரி நல்ல தளத்தில் பேசி கெடுத்து விட வேண்டாம்...

ஒரு நல்ல விஷயம் எங்கு நடந்தாலும்
அதை நாம் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு...?

எவனோ கணினியை கண்டு பிடித்தான்
அவன் என்ன மதமென்று தெரிந்தால் நாம் வாங்காமல் விட்டு விடுவோமா?

எவனோ அலை பேசியை கண்டு பிடித்தான்
அவன் நம் மதம் இல்லை என்றால் வாங்காமல் விட்டு விடுவோமா?

ஆனால் பூச்சியத்தை கண்டு பிடித்தவன் இந்தியன்
அது இல்லை என்றால் மேலே சொன்ன இரண்டும் இல்லையே...

ஏனெனில் பூச்சியத்தின் மதிபீடல்களே இன்றைய கணினி உலகத்தின்
ஒட்டுமொத்த வளர்ச்சி...

ஒரு இந்தியன் கண்டு பிடித்ததற்காக எந்தவொரு அயல் நாட்டுக் காரனும் பயன் படுத்தாமல் இருக்க முடியுமா?

அதை வைத்தே அவன் எவ்வளவு கண்டு பிடித்து விட்டான் தோழரே?

அதுதான் வாழ்க்கை...
அதுதான் ஒரு வளமான சமுதாயத்திற்கும்
வளமான முன்னேற்றத்திற்கும் உறுதுணையாகும்...

ஆகவே ஒரு நல்லது இருக்குமென்றால்
அதை எடுத்துக் கொண்டு எப்படி இன்னும்
நாம் நம் சமூகத்தை மாற்ற முடியுமென சிந்திக்க வேண்டுமே தவிர

என் மதம் உன் மதம்
என் நாடு உன் நாடு
இப்படி பிரித்து பார்த்துக் கொண்டிருப்பதில்
எந்தவொரு முன்னேற்றமும் வந்து விட போவது இல்லை...

வாழ்க தமிழ் !
வளர்க தமிழர்கள்...!!

எழுதியவர் : ஜின்னா (24-Jan-15, 10:45 pm)
பார்வை : 609

சிறந்த கட்டுரைகள்

மேலே