கனவுக் கோட்டை

நான் நினைத்ததெல்லாம் ...
என் மனதிற்கு பிடித்ததெல்லாம் ...
ஒவ்வொன்றாய் நடக்கிறது...!
ஆறைந்து சென்டில்
அழகாக ... அற்புதமாக ...நான்
கட்டியெழுப்பிய என் கனவு வீடு !
வீட்டினுள்ளே எனக்குப் பிடித்த
இனோவா காரு !
சுற்றிலும் வண்ணப் பூச்செடிகள் !
அன்பான பொம்மேரியன்
என்னோடு ...
வீட்டை வலம் வர ...
என் கனவுக் கோட்டையை
கட்டியெழுப்பிய
மகிழ்ச்சிப் பெருவெள்ளம்
மனதில் கரை புரண்டோட...
என் மனைவி வீசிய கேரட் துண்டு
முன்நெற்றியில் பட்டு
உருண்டோட ...
கண் விழித்துப் புறப்பட்டேன் ...
கனவுக் கோட்டையை ,
நிஜக் கோட்டையாக்க
நிதானமாய் ...
அலுவலகப் பணிக்கு !!!

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (25-Jan-15, 11:55 am)
Tanglish : kanavuk kottai
பார்வை : 135

மேலே