நல்லதோர் தலைவன் நீ
தலைவனுக்கு ஒரு எடுத்துக்காட்டு நீ
புன்னகையே உந்தன் மகுடம்..
எங்கள் பாதைகள் அறியாமை இருளால்
சூழப்பட்ட போதும்
நிலவென நீ இருந்தாய் வழிகாட்ட ...
எங்கள் தவறுகளின் போதும்
இனிய திருத்தங்கள் தந்தாய் முன்னேற ..
தலைக்கனம் கண்டதில்லை
ஒருநாளும் உன்னிடத்தில்..
பாகுபாடு பார்த்ததில்லை
ஒருபோதும் உன் பேச்சில் ..
புண்பட்டுப் போனதில்லை
ஒருகணமும் உன் செயல்களில்..
பண்பட்ட மனதோடு பயணிக்கிறோம்
உன்னை தலைவனாய் ஏற்றபடி ..