காதல்வாதி
![](https://eluthu.com/images/loading.gif)
வருட கணக்கில் காத்திருப்பேன்
உனக்கென அமைதியாக - காந்தியவாதி அல்ல .....
தீவிரமாய் நேசிப்பேன் நான்
சாகும் வரை - தீவிரவாதி அல்ல ...
கனவு தேசத்தில் உன்னை
மட்டும் குடியமர்துவேன் - தேசியவாதி அல்ல ...
தவமாய் தவமிருப்பேன் என் தெய்வ
தேவதை உனை காண - ஆன்மீகவாதி அல்ல ....
கோவில்கள் செல்லேன் உன் இதய
கோவில் திறக்கும் வரை - நாத்திகவாதி அல்ல ....
உன் பெயர் மட்டும் மந்திரமாய்
உச்சரிப்பேன் - மந்திரவாதி அல்ல ...
உன் காதல் மட்டும் விரும்பும்
காதல்வாதி நான் .........