ஆங்கிலத்தில் படித்த ஒரு கதையின் தமிழாக்கம் நகைச்சுவை உணர்வுடன் வெண்டுறையில்

வெண்டுறையில் நகைச்சுவை

பாடம் ..

இருபத்தி ஐந்து வருடமும் ஆகி
இருவர் நடுவில் ஒருபூ சலுமின்றி
வாழும் கணவன் இருப்பானோ வென்று
திருமண மாகா தவர்ஐயம் கொண்டு
வருகைதந் தார்அவர் வாழ்வின்மர் மம்அறியும்
ஆவலும் கொண்டு


திருமண மான சிலநாள் பிறகு
ஒருநாள் பகலில் இருவரும் சேர்ந்து
கடற்கரைக் காற்று அனுபவிக்கும் நேரம்
பரிமேல் சவாரிசெய்யும் ஆவல் மொழிந்தவள்
ஏறிய அஸ்வம் மணல்மீது வீழ்த்த
பொறுத்தேன் ஒருமுறை என்றாள்

அணைத்துப் பரிமேல் மறுமுறை ஏற
கனைத்துக் குதிரை மணல்மேல் இடவும்
இரண்டாம் முறையாய் பொறுத்துப் பரிமேல்
அடுத்த முறையும் அவளே றியபோது
துள்ளிக் குதிரைகீழே வீழ்த்திய வேளை
பரியைசுட் டுக்கொன்றே விட்டாள்

சுருண்டு கிடந்த குதிரையைக் கண்டு
வருந்திநானும் நின்ற பொழுது கலங்கி
இருக்கும் விழிகளைக் கண்டதும் இல்லாள்
நெருங்கி அருகில்வந் தென்னிடம் குற்ற
மிழைத்தேனா என்றதும் பீதியில் ரத்தம்
உறைந்தது மேனியில்

நிகழ்ந்த கதையை முடித்திடும் நேரம்
குளம்பி கொணர்ந்து அவர்முன்னில் வைக்க
எடுத்து அதனைப் பருகிய வேளை
இனிப்பிட வில்லையென் றாயினும் கூட
மடமட வென்று குடித்ததும் நண்பரின்
கைகால் நடுக்கம் எடுத்தது

இல்லாள் செயலில்குற் றம்குறைகள் சொல்ல
நினைத்தால் பரியின் நிலைதான் கிடைக்கும்
எவற்குமென்று அன்றே புரிந்துகொண்டேன் என்வாழ்வின்
மூலம்என் றேசொல்லி மெள்ள எழுந்து
விரைந்தபோது நண்பர் நமுட்டுச் சிரிப்பு
உதிர்த்தார் இருஇதழ்கள் ஓரம்

===
பி.கு. ஆங்கிலத்தில் படித்த ஒரு கதையின் தமிழாக்கம் வெண்டுறையில்

எழுதியவர் : வெங்கடாசலம் தர்மராஜன் (25-Jan-15, 9:49 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே