இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்

இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்..!!

நிறம் நம்மை வேறுபடுத்தலாம்
நினைவால் நாம் இந்தியர்!
மதம் நம்மை வேறுபடுத்தலாம்
மனதால் நாம் இந்தியர்!
மொழி நம்மை வேறுபடுத்தலாம்
மதியால் நாம் இந்தியர்!
இடம் நம்மை வேறுபடுத்தலாம்
இதயத்தால் நாம் இந்தியர்!
ஆயிரம் பிரிவுகள் நம்மில் தெரிந்தாலும்
அன்பிலும் பண்பிலும் நாம் இந்தியர்!
இந்தியராய் இருந்து பெருமை கொள்வோம்!
இந்தியர்க்கு இன்னும் புகழ் சேர்ப்போம்!
நம்கொடி பட்டொளிவீசிப் பறக்கட்டும்!
நம்இனம் பார்வியக்க உயரட்டும்!
"ஜெய்ஹிந்த்!"

எழுதியவர் : சீர்காழி சபாபதி (26-Jan-15, 7:40 am)
பார்வை : 1332

மேலே