குடியரசே ஏழ்மையை விரட்டு -----அஹமது அலி-------
வல்லரசாகும் வேகத்தில்
என் நாடு ஒடிக் கொண்டிருக்கிறது.....
விண்வெளி விஞ்ஞானத்தில்
வீறுநடை போடுகிறது....
இராணுவ பலத்தில்
நான்காம் இடம் பெற்றது.....
இளைஞர் சக்தியில்
முதலிடம் பெற்றது....
தொழிலுட்பத் துறையில்
கொடிகட்டி பறக்கிறது...
எத்தனை முன்னேறியும்
எங்களின் வறுமை மட்டும்
வழிவழியாய் தொடர்கிறது....
இடுப்புக்கு துணி இல்லாது போயினும்
தேசியக் கொடியை பறக்க விட்டு
குடியரசு தின வாழ்த்துகளை
வைக்கிறேன்....
குடியரசே ஏழ்மையை விரட்டு
ஏழை எளியவரை உயர்த்து!