சீரற்ற கவிதை

சீரற்ற கவிதை அவள்
சிரிப்பற்ற தேவதை அவள்
சிறகற்ற பறவையவள்
சீராட்ட வேண்டியவள் அவள்
சாக்கடை நீரின் சிதறலில் வந்த வானவில் அவள்

விளக்கமற்றவள் அனைவரும்
விலக்கி வைத்தவள்
வினவுகின்றவள் அவளும்
விண்நிலவு போலே
மண்னை தொட்டவள்

நவநாகரீக ஆடை போல
அங்காங்கு கிழிந்திருந்தவள்
நவகிரகங்களாலும் தகர்த்தப்பட்டவள்

இறையின் உருவமவள்
இறையின் தவறுமவள்
இரைச்சலில் வாழுமவள்
இகழ்ச்சியால் தாழுமவள்

கருவறை கொண்டவள்
தெருவறை கொண்டவள்
கல்லரை தவிர்த்திடவே
சில்லரை வேண்டுமவள்

வீசப்பட்டவளா......? இல்லை
பெற்றவனே அனுப்பியதால்
நாசப்பட்டவளா......?

ஐயோ
கலவிவாசம் கொண்ட உன் தகப்பன்
கல்விவாசம் மறுத்தானா.....?
கணிணியோடு போவோர் மத்தியில்
கையேந்த வைத்தானா......?

மோகப்பேய்களின் விலை(ள)நிலத்து
விளைச்சலானாயா.....?
இரக்கமற்ற கதிரவனுக்கு
உன் முகம்தான் கிடைத்ததா....?
கருகி விட்டாயடி
கவலை கொள்ளாதே
படியளப்பவன் உறங்கி கிடக்கையிலே பிறந்துவிட்டாய்
ஆனால் உனக்கென படிப்பளிக்க
இயலும் கண்ணே வா......

ம்ம்ம்
நாதியற்ற உன்னை
வீதியெல்லாம் ஏளனம் செய்யும்
சாதி என்ன என்று
சாஸ்திரம் ஓதும் கலங்காதே
நீ இனி என் குழந்தையடி

- ஏழைக்குழந்தைகளை காப்பீர்

எழுதியவர் : கவியரசன் (26-Jan-15, 8:13 pm)
பார்வை : 139

மேலே