இனி
தண்ணீர் குடமெடுத்து நீ நடந்த பாதையிலே
கண்ணீர் சிந்தாமல் நான் கடந்து போவேனோ
இனி,
கண்கள் திசையறிந்து நானுனை ரசித்த வேளையிலே
மௌனம் சுமக்காமல் நான் சிரித்து போவேனோ
இனி,
மஞ்சள் நிற உடை உடுத்தி மணமேடை போனவளே
பிணமேடை நானறிவேன் 'பிணம்தானே நான்' இறப்பேன்
இனி,
உனை மறந்து நான் சிரித்த நிமிடங்கள் போனதடி,
உனை நினைத்தே வாழ்வதுதான் நிரந்தரமாய் ஆனதடி.
என்னவளே வந்துவிடு,
என்னுயிரைத் தந்துவிடு.