நினைவின் ஊஞ்சலில்

..."" நினைவின் ஊஞ்சலில் ""...
உயரமாய் மலைகளும்
நேர்த்தியான நதியும்
வார்த்தைகளை வல்லமாக்கி
நீந்துகின்ற நினைவுகள் !!!
அருகிலிருந்த எல்லாம்
தூரமாய் போனதனால்
தூரமாய் உள்ளதெல்லாம்
அருகினில் வந்தது !!!
வறட்சியானதொரு பசுமை
சுமையான சுகங்கள்
மலரும் நினைவுகளின்
இலையிதிர் காலம் !!!
கூந்தலை காற்றிசைக்க
மேனியெங்கிலும் ஓர்
இனம் புரியாத சூடு
கொஞ்ச(சு)ம் நெருடலாய் !!!
தனிமையில் இனிமையல்ல
தவிப்பின் கொடுமையிது
நினைவின் ரீங்காரத்தில்
மிதக்கும் காகித ஓடம் !!!
சங்கிலியில் பிணைந்த
நினைவின் கூட்டை
வண்ணத்து பூச்சிகள்
கட்டியிழுக்கும் கனவுத்தேர் !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...