Salute to Thiruvalluvar

இரு வரியில் செய்யுள் புனைந்து
அதன் பொருளை எளிதருகி
முப்பால் முழுதும் ஈர்த்து
செவிக்குணவு மட்டும் அன்றி
அறிவுக்கும் உவைமையாய்
ஆயிரம் இரண்டு ஆண்டுகள் கடந்தும்
அழியாத ஆவணமாய்
தமிழரின் பெருமையினை
செந்தமிழில் பறைசாற்றி
திருக்குறள் என்ற மாபெரும்
பெரும் செல்வம் நீர் அளித்தீர்;

குறள் பொருள் நல் உணர்ந்து
வழி நாம் நல் நடந்து
உடன் செல்வோம் அதன் எனில்
மேன் மேலும் நம் நாட்டில்
பண்பாடு உயர்ந்திடுமே!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 5:14 pm)
பார்வை : 3071

மேலே