மனசே நீ வாழ்க

காதலை தந்தவன் ....
காலமெல்லாம் வலியை ..
தருகிறான் - மனசே !!!
நீ அவரை நினைக்கிறாயே ...!

என் மனமே ....
அவர் நினைக்காதபோது ...
நீ நினைத்துகொண்டு ...
இருப்பது உன் மூடத்தனமோ ...?
மனசே நீ வாழ்க ....!!!

குறள் 1242
+
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 162

எழுதியவர் : கே இனியவன் (28-Jan-15, 9:45 am)
பார்வை : 94

மேலே